கார்ன்மீல் பொங்கல் | Cornmeal Ven pongal

தேவையான பொருட்கள்:

கார்ன்மீல்(சோளரவை ) - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
முந்திரி - தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பாசிபருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து கார்ன்மீல் சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.

*பின் வேகவைத்த பாசிபருப்பு மற்றும்உப்பு மற்றும் தேவையானளவு கொதிநீர் சேர்த்து கிளறவும்.

*வெந்ததும் நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

அம்மா தேங்காய் சட்னியை விதவிதமாக செய்வாங்க,அதில் இந்த செய்முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஹோட்டல் தேங்காய் சட்னி போலவே இருக்கும்.

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்

பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
புளி -ப்ளூபெர்ரி பழளவு
சின்னவெங்காயம் - 2
பச்சை மிளகாய் -4
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டு -2 பல்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*1 டீஸ்பூன் எண்ணெயில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு  இவற்றை வதக்கவும்.

*ஆறியதும் இதனுடன் தேங்காய்த்துறுவல், உப்பு, பொட்டுக்கடலை மற்றும் புளி தேவையான நீர் சேர்த்து மைய அரைத்து தாளித்து சேர்க்கவும்.

Related Videos