முட்டை கட்லட் | Egg Cutlet

தேவையான பொருட்கள்: 

வேகவைத்த முட்டை - 4

Instant Dry Mashed Potato Mix - 2 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மைதா - 2 டேபிள்ஸ்பூன்

ப்ரெட் க்ரம்ஸ் - தேவைக்கு

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*ஒரு பவுலில் உருளை மிக்ஸ், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*முட்டையை 2ஆகவோ அல்லது 4ஆகவோ கட்செய்யவும்.

*உருளை கலவையை சிறிது எடுத்து அதனுள் கட்செய்த முட்டையை வைத்து ஸ்டப் செய்யவும்

*மைதா மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

*ஸ்டப்பிங்கை மைதாவில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டவும்.

*கட்லட் அனைத்தையும் ப்ரிட்ஜில் 15 நிமிடம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பின் குறிப்பு:

*இன்ஸ்டண்ட் உருளை மிக்ஸ் பதிலாக வேகவைத்து மசித்த உருளையை சேர்க்கலாம்.

*எண்ணெயில் பொரிப்பதற்க்கு பதில் தவாவில் எண்ணெய்விட்டு 2புறமும் சுட்டெடுக்கலாம் அல்லது அவனில் பேக் செய்தும் எடுக்கலாம்.

*முட்டையை 2ஆக கட் செய்வதற்கு பதில் 4ஆக கட் செய்யலாம்.2ஆக கட் செய்தால் கட்லட் ரொம்ப பெரிதாக இருக்கும்.

*முட்டைக்கு பதில் துருவிய பனீர் அல்லது சீஸ் சேர்க்கலாம்

Related Videos