பொன்னாங்கன்னிக் கீரைப் பருப்பு கடைசல் | ponnanganni keerai paruppu kadaiyal
தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு - 1/2 கப்
பொன்னாங்கன்னிக் கீரை - சிறு கட்டு
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1
உப்பு -தேவைக்கேற்ப
தாளிக்க :
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மோர் மிளகாய் - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
*பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் கீரையைப் போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.கீரை வேகும் போது மூடக்கூடாது,மூடினால் கருத்துப் போய்விடும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளிக்கவும்.
*ஆறியதும் கீரையுடன் தாளித்தவைகளையும் கொட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
*இப்போழுது சுவையான கீரைக் கடைசல் தயார்.