பொன்னாங்கன்னி கீரை பொரியல் | Ponnangkanni Keerai(Dwarf Copperleaf) Poriyal

தேவையான பொருட்கள்: 


பொன்னாங்கன்னி கீரை - 1/2 கட்டு
பாசிபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு + உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

*பாசிபருப்பை மஞ்சள்தூள் சேர்த்து 3/4 பதமாக வேகவைத்தெடுக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் கீரை மற்றும்  உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.தண்ணீர் ஊற்றவேண்டாம்.கீரையிருந்து வரும் நீரே போதுமானது.

*வெந்ததும் பாசிபருப்பு மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்

Related Videos