ரவை புட்டு
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
ஏலக்காய் -2
உப்பு - 1சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*ரவையை சிறிது நெய்விட்டு பிசிறி கடாயில் வறுக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.
*உப்பு கரைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறி ஆவியில் வேகவிடவும்.
*வெந்ததும் நெய் தொட்டு கையால் கட்டியில்லாமல் உதிர்த்து ஏலக்காய்ப்பொடி, சர்க்கரை மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் குறிப்பு:
*இந்த புட்டு செய்வது மிகவும் எளிது.விருப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.