பரங்கிப்பேட்டை பிரியாணி
இந்த பிரியாணிக்கு வெள்ளை மிளகு,சோம்பு,சீரகம்,ஏலம்,பட்டை ,கிராம்பு,கசகசா சேர்த்து செய்யும் பொடிதான் முக்கியமானது.இஞ்சியை விட பூண்டு அதிகமா இருக்கவேண்டும்.
இந்த பொடியை தாள்ச்சா,மட்டன் வறுவலுக்கும் பயன்படுத்தலாம்.நான் வெள்ளை மிளகுக்கு பதில் கறுப்பு மிளகுதான் பயன்படுத்தியுள்ளேன்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி - 1 பெரியதுண்டு
முழுபூண்டு - 2
புதினா,கொத்தமல்லிதழை - தலா 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பட்டை - 1துண்டு
கிராம்பு - 3
ஏலககய் - 3
பிரியாணி இலை - 4
வறுத்து பொடிக்க
மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
சோம்பு - 2 டீஸ்பூன்;
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வெங்காயம் மற்றும் தக்காளி நறுக்கவும்.இஞ்சி பூண்டு அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*மட்டனை சுத்தம் செய்து சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது,தயிர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் வறுத்து பொடித்த பொடியில் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.
*பின் தக்காளி, பச்சை மிளகாய், புதினா கொத்தமல்லி, மீதமுள்ள மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்த கறி சேர்த்து வதக்கவும்.
*கறிவேகவைத்த நீரை சேர்த்து 6 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் போது உப்பு மற்றும் அரிசி சேர்த்து வேகவிடவும்.
*நீர் சுண்டி வரும் போது நெய்யை ஊற்றி 190°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் குறிப்பு :
*எனக்கு இந்த முறையில் செய்வதுதான் நன்றாக வரும்.அவரவர் விருப்பம்போல் சாதத்தை தனியாக வடித்தும் தம் போட்டு செய்யலாம்