ஒட்ஸ் அவல் புட்டு
தேவையான பொருட்கள்:
ஒட்ஸ் - 1/2 கப்
அவல் - 1 /2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
செய்முறை விளக்கம்:
*அவல் மற்றும் ஒட்ஸை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.
*பின் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.கையால் உருண்டை பிடித்தால் உதிரும் பதத்திற்க்கு இருக்கவேண்டும்.
*பின் ஆவியில் வேகவைத்து சர்க்கரை, தேங்காய்த்துறுவல் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.