வெல்ல புட்டு
தேவையான பொருட்கள்:
அரிசிமாவு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
நீர் - 3/4 கப் + 1/4 கப்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அரிசிமாவை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும்.
*3/4 கப் நீரில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து வறுத்த மாவில் கொஞ்சகொஞ்சமாக தெளித்து கட்டியில்லாமல் உதிரியாக பிசையவும்.
*மாவை கையால் எடுத்தால் உருண்டை பிடிக்க வரவேண்டும்,அழுத்தினால் பொலபொலவென கொட்டவேண்டும்.அதுவே சரியான பதம்.
*அதனை ஆவியில் 30-45 நிமிடங்கள் வேகவைத்து ஆறவைக்கவும்.
*வெல்லத்தை 1/4 கப் நீரில் சூடு செய்து,கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவைக்கவும்.
*பாகை நீரில் விட்டால் உருண்டை எடுக்கும் பதத்தில் வரவேண்டும்.
*அந்த பதத்தில் பாகை மாவில் கொட்டி கிளறி 5 நிமிடங்கள் வைக்கவும்.
* அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.