கோதுமைரவை வெண்பொங்கல் | Wheat rava Ven pongal

தேவையான பொருட்கள்:

கோதுமைரவை - 1 கப்
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கற்வேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கோதுமைரவையை வறுக்கவும்.

*லேசாக வறுபட்டதும் வெந்த பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.

*உப்பு மற்றும் 2 1/2 கப் வெந்நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

 *பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

*பின் மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து சாம்பார்,சட்னியுடன் பரிமாறவும்.

Related Videos