வெங்காய வடகம் அல்லது தாளிப்பு வடகம்
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 2 கிலோ
மஞ்சள்தூள் - 1/3 கப்
கடுகு - 1/2 கப்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/4 கப்
உப்பு - 1/2 கப்
பூண்டு - 4 பெரிய முழு பூண்டு
சீரகம்+சோம்பு தலா 1/4 கப்
கறிவேப்பிலை - 1/3 கப்
நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் - 50 கிராம்
செய்முறை விளக்கம்:
* வெங்காயத்தை தோலுரித்து கழுவி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுத்தி எடுக்கவும்
*மிக்ஸியைக் கழுவி அந்த தண்ணீரை வெங்காயத்தில் சேர்க்கவும்.
*மஞ்சள்தூள்,உப்பு உப்பு கரிக்கும் அளவு இருந்தால் தான் கெடாது]சேர்த்து மண்சட்டியில் அல்லது பிளாஸ்டிக் வாளியில் பிசைந்து வைக்கவும்
*3 வது நாளில் கடுகு, வெ.உ.பருப்பு, சீரகம், வெந்தயம், சுத்தம் செய்த கறிவேப்பிலை மற்றும் தோலுடன் நசுக்கிய பூண்டு இவற்றை எல்லாத்தையும் வெங்காயத்தில் சேர்த்து பிசைந்து 2 நாள் ஊறவிடவும்
* 2 நாள் கழித்து பிளாஸ்டி ஷீட்டில் வெங்காயத்தை தண்ணீயில்லாமல் பிழிந்து உருண்டைகளாக பிடித்து காயவைக்கவும்.
*மாலையில் மறுபடியும் அதே தண்ணீயில் போடவும்.இதே மாதிரி அந்த தண்ணீர் வற்றும்வரை காயவைக்கவும்.
*வெங்காயத்தை கையில் எடுத்தால் பொலபொலவென காய வைக்கவும்
*நன்கு காய்ந்ததும் எண்ணெய் கலந்து வைக்கவும்.
*இது எத்தனை வருடமானாலும் கெடாது.
பின் குறிப்பு:
*சாம்பார்,துவையல்,வத்தக்குழம்பு,கூட்டு என அனைத்திற்க்கும் தாளிக்க பயன்படுத்தலாம்.வாசனை தூக்கலா இருக்கும்.
*வடகம் நாளாக கலர் மாறிவிடும்,அதனால் கெட்டுவிட்டது என பயப்பட வேண்டும்
*எப்போழுதும் வடகத்திற்கு சின்ன வெங்காயம் மட்டுமே பயன்படுத்தவும்.
*வடகம் காய்ந்ததும் அளவு குறைந்துவிடும்.எப்போழுதும் தாளிக்கும் பொழுது 1 டீஸ்பூன் அளவு பயன்படுத்தவும்,என்ணெயில் பொரிந்ததும் அதிகமாகும்.
*எங்க ஊர் பாண்டி பக்கமெல்லாம் இந்த வடகம் இல்லாத சமையலே இல்லை எனலாம்.இதைதான் நாங்க பயன்படுத்துவோம்