பாவ் பன்(டின்னர் ரோல்ஸ்)

தேவையான பொருள்கள்:

ஆல் பர்பஸ் மாவு - 3 கப்

வெண்ணெய் -50 கிராம் அறை வெப்பநிலையில்

ஈஸ்ட் - 1 டேபிஸ்பூன்

சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்

பால் -1/2 கப்

எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்

உப்பு -3/4 டீஸ்பூன்

ROUX:

மைதா -1/2 கப்

நீர் -1 கப்

செய்முறை விளக்கம் :

*வெதுவெதுப்பான பாலில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து கலக்கி 10 நிமிடம் வைக்கவும்.

*பாத்திரத்தில் ROUX  செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கெட்டியில்லாமல் கலக்கி அதனுடன் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கட்டியில்லாமல் கலக்கவும்.

*ஆறியதும் அதனுடன் ஈஸ்ட் கலவை மாவு, உப்பு சேர்த்து பிசையவும்.தேவையானால் மட்டும் நீர் சேர்க்கவும்.

*மெல்லிய ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் மாவை வைக்கவும்.

*உப்பிய மாவை பிசைந்து மீண்டும் வெப்பமான இடத்தில் வைக்கவும்

*பின் பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி மாவை சம உருண்டைகளாக எடுத்து அடுக்கி வைத்து மீண்டும் 1 மணிநேரம் வைக்கவும்.

*அவனை 180°C 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.

*பின் முட்டை/பால்/வெண்ணெய் தடவி 25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்

Related Videos