கோதுமைரவை ஸ்டப்டு பன்
தே.பொருட்கள்:
கோதுமைரவை - 1/2 கப்
கோதுமைமாவு - 3 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
ஸ்டப்பிங் செய்ய:
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த கலர் குடமிளகாய் - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*கோதுமைரவையில் 1 கப் கொதிக்கும் நீரைவிட்டு ஊறவிடவும்.சிறிது நேரத்தில் ஊறியிருக்கும்.
*வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
*கோதுமை மாவையும் ரவையும் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஈஸ்ட் கலந்த நீரை ஊற்றி கெட்டியாக பிசைந்து ஈரமான துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*1 மணிநேரத்தில் மாவு 2மடங்காக உப்பியிருக்கும்,மறுபடியும் நன்கு பிசைந்து 1மணிநேரம் வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*பின் மிளகாய்த்தூளை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கி இறக்கினால் ஸ்டப்பிங் ரெடி.
*மாவை நன்கு மிருதுவாக பிசைந்து தேவையானளவில் உருண்டைகள் போடவும்.
*ஒவ்வொரு உருண்டையிலும் ஸ்டப்பிங் கலவையை வைத்து நன்கு மூடி அவன் டிரேயில் வைத்து 1/2 மணிநேரம் வைக்கவும்.மறுபடியும் உருண்டை நன்கு உப்பி வருவதற்காகதான் 1/2 மணிநேரம் வெளியில் வைக்கிறோம்.
*அவனை 230 முற்சூடு செய்து 20 - 30 பேக் செய்து எடுக்கவும்.
பி.கு:
*ஸ்டப்பிங் அவரவர் விருப்பத்துக்கேற்ப வைக்கலாம்.இந்த அளவிற்க்கு நார்மலாக 6 உருண்டைகள் வரும்