கேரட் ஒட்ஸ் மஃபின்
தேவையான பொருள்கள்:
துருவிய கேரட் - 2
முட்டையின் வெள்ளைக்கரு - 2
தயிர் - 1 கப்
ஒட்ஸ் -1 கப்
கோதுமை மாவு - 1கப்
காய்ந்த திராட்சை - 10
தேன் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம் :
*ஒரு பவுலில் தயிர், ஒட்ஸ் மற்றும் திராட்சை கலக்கவும்.
*இன்னொரு பவுலில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் பட்டைத்தூள் கலக்கவும்.
*முட்டை வெள்ளைக்கரு மற்றும் தேனை ஒட்ஸில் நன்கு கலந்து அடித்துக் கொள்ளாவும்.
*கோதுமை மற்றும் ஒட்ஸ் கலவை இரண்டையும் நன்கு கலந்து அதில் துருவிய கேரட் கலந்து மஃபின் கப்பில் ஊற்றவும்.
*அவனை 350 டிகிரியில் 20-25 நிமிடம் டைம் செட் செய்து பேக் செய்து எடுக்கவும்.
*ஆறியதும் கப்பிலிருந்து ஈஸியாக எடுக்க வரும்