லெமன் கேக்
தேவையான பொருள்கள்:
முட்டை - 4
சர்க்கரை - 130 கிராம்
உருக்கிய வெண்ணெய் - 80 கிராம்
ஆல் பர்பஸ் மாவு - 120 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/2 பாக்கெட்
எலுமிச்சை பழம் - 1
துருவிய எலுமிச்சைத் தோல் - 1/2 டேபிள்ஸ்பூன்
தேவையான பொருள்கள்:
*முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்களை தனியாக பிரிக்கவும்.
*வெள்ளைக்கருவை நன்கு நுரைவரும் வரை பீட் செய்யவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.
*மஞ்சள் கருவுடன் சர்க்கரை சேர்த்து,சர்க்கரை கரையும் வரை பீட் செய்து அதனுடன் வெண்ணெய், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, மாவு மற்றும் துருவிய எலுமிச்சைத் தோல் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக அடிக்கவும்.
*இதனுடன் வெள்ளைக் கருவை கலந்து கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்
*அவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்து 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்