Homemade Rice Flour
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
செய்முறை விளக்கம்:
*அரிசியை கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*துணியில் ஈரம் போக நிழலில் உலர்த்தவும்
*கொஞ்ச கொஞ்சமாக அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*பொடித்த மாவை சல்லடையில் சலிக்கவும்
*சல்லடையில் அரிசி ரவை இருக்கும்,அதனை முறுமுறை அரிசி அரைக்கும் போது சேர்த்து அரைக்கவும்.
*மாவு நைசாக சலிப்பது மிக முக்கியம்
*சலித்த மாவை கடாயில் கொஞ்சமாக போட்டு வறுக்கவும்
*மாவு வறுபட்டதும் வாசனை வரும்,அதுவே சரியான பதம்
*வறுபட்ட மாவை மீண்டும் சலித்தெடுக்கவும்
*மாவு நன்கு சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
*இந்த மாவை முறுக்கு,புட்டு,கொழுக்கட்டை,இடியாப்பம் என அனைத்திற்க்கும் பயன்படுத்தலாம்.
பின் குறிப்பு:
*1 கப் அரிசியில் = 2 கப் அரிசிமாவு வரும்.
*மாவை வறுக்காமல் துணியில் மூட்டைக் கட்டி ஆவியிலும் வேகவைத்து எடுக்கலாம்.வேக கிட்டதக்க 1 மணிநேரத்திற்க்கும் மேல் ஆகும்.அடிக்கடி மாவை கிளறிவிடணும்.மாவு வெந்துவிட்டதா என பார்க்க அடியில் இருக்கும் மாவை பிடித்து பார்த்தால் பொலபொலவென கொட்டவேண்டும்.அது சரியான பதம்.ஆறியதும் மீண்டும் மாவை சலித்து ஆறவைத்து பயன்படுத்தவும்.இது கொஞ்சம் கடினமான வேலை அதனால் நான் மாவை வறுத்து விடுவேன்....
*சல்லடையில் 3 கம்பிவலை இருக்கும்,மிக பொடியாக இருக்கும் வலைதான் மாவு சலிக்கும் வலை