பில்டர் காபி போடுவது எப்படி
தேவையான பொருட்கள்:
கொழுப்புள்ள பால் -1 1/2 கப்
காபிதூள் -2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -2 டீஸ்பூன்
உப்பு -1 சிட்டிகை
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் தண்ணியை நன்கு கொதிக்கவைக்கவும்.பில்டர் மேல் பாத்திரத்தில் அடியில் உப்பு சேர்த்த பின் காபிதூளை சேர்க்கவும்
*அதன் மேல் நீண்ட கம்பிபோல இருப்பதை வைத்து அதனை அப்படியே அழுத்தி பிடித்து கொதிக்கும் தண்ணியை ஊற்றி மூடி போட்டு மூடினால் 3 நிமிடத்தில் டிகாஷன் ரெடி
*தண்ணி கொதிக்கும் போது இன்னொரு அடுப்பில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.டிகாஷன்+சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சிய பாலினை வடிகட்டி டிகாஷனில் சேர்க்கவும்
இப்போழுது நன்கு நுரை பொங்க ஆற்றி டபாரா செட்டில் ஊற்றி பருக வேண்டியது தான்.
பின் குறிப்பு:
*எப்போழுதும் பாலும்,டிகாஷனும் சூடாக இருக்க வேண்டும்.டிகாஷன் அவரவர் விருப்பத்துக்கு சேர்க்கவும்.
*மறுபடியும் அதே டிகாஷனில் நீரை கொதிக்க வைத்து ஊற்றினால் 2வது டிகாஷன் ரெடி !!
*முதல் டிகாஷன் திக்காகவும் சுவையாகவும் இருக்கும்.2வது டிகாஷன் வெளிர் நிறத்தில் இருக்கும்.
*பில்டர் எப்போழுதும் காய்ந்து இருக்கவேண்டும்,ஈரமிருந்தால் டிகாஷன் இறங்காது.
*காபிதூள் போடும் பாத்திரம் சிலநேரம் அடைத்துக்கொள்ளும் அப்போழுது ஊசியால் குத்தினால் டிகாஷன் சீக்கிரம் இறங்கும்.
*கொழுப்புள்ள பாலையே பயன்படுத்தவும்.