ஓமம் பிஸ்கட்

தேவையான பொருட்கள்: 

மைதா மாவு - 2கப்

வெண்ணெய் - 50 கிராம் அறை வெப்பநிலையில்

ஓமம் -2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்

பால் - மாவு பிசைய தேவையானளவு

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(அ)பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*ஒரு பவுலில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்

*தேவையானளவு பால் தெளித்து சப்பாத்திமாவு பதத்தில் கெட்டியாக பிசையவும்

*2 பங்காக மாவை பிரித்து மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் உருட்டவும்.

*குக்கீ கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டவும்.

*பிஸ்கட் உப்பாமல் இருக்க அங்கங்கே முள் கரண்டியால் குத்தி விடவும்

*அவன் டிரேயில் அடுக்கி 180°C டிகிரியில் 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

*பிஸ்கட் சூடாக இருக்கும் போது மெத்தென்று இருக்கும்.ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்

Related Videos