சம்பா சாதம் & சிதம்பரம் கொத்சு | Samba Sadam & Chidambaram Gotsu | Chidambaram Kovil Special


சம்பா சாதம் + கத்திரிக்காய் கொத்சு இவையிரண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில்  இறைவனுக்கு படைக்கபடும் முக்கிய பிரசாதம்.

சம்பா சாதம் என்பது உதிரியாக வடித்த சாதத்தில் நெய்யில் தாளித்த மிளகுத்தூள்+கறிவேப்பிலை இவைகளை சாதத்தில் போட்டி கிளறி செய்வது.

கத்திரிக்காய் கொத்சு என்பது சிறிய கத்திரிக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் புளிகரைசல்+கொத்சு பொடி சேர்த்து செய்வது.கோவில் தீட்ஷீதர்கள் இதில் வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.இது கோவிலில் செய்யும் முறை.

சிதம்பரம் சென்றால் உடுப்பி விலாஸ் ஹோட்டல் கொத்சு சாப்பிட யாரும் மறக்காதீங்க,பொங்கல் + இட்லியுடன் சாப்பிட சூப்பர்.

சம்பா சாதத்தில் கொத்சு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் என கேள்விபட்டதோடு சரி.

நான் செய்திருக்கும் கொத்சு,கத்திரிக்காயை சுட்டு செய்திருக்கேன்,ஆனால் கோவிலில் செய்யும் கொத்சுவில் சிறிய கத்திரிக்காயை எண்ணெயில் வதக்கி செய்வாங்க.

சம்பா சாதம் செய்ய தேவையான பொருட்கள்: 

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
ப்ரெஷ் மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*கடாயில் நெய் விட்டு மிளகுத்தூள், கறிவேப்பிலை  சேர்த்து தாலித்து சாதம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
*விரும்பினால் தாளிக்கும் போது முந்திரிப்பருப்பு சேர்க்கலாம்.

சிதம்பரம் கொத்சு:

தேவையான பொருட்கள்: 

பெரிய கத்திரிக்காய் -1
புளிகரைசல் - 1 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்சு பொடி செய்ய

காய்ந்த மிளகாய் -2
தனியா - 2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நல்லெண்ணெயில் வறுத்து பொடிக்கவும்.

*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அவன் அல்லது அடுப்பில் சுட்டு ஆறியதும் தோலுரித்து நன்கு மசிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு புளிவாசனை போனதும் மசித்த கத்திரிக்காய்+பொடித்த பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும்.

பின் குறிப்பு:

 *வெங்காயம் சேர்க்க விரும்புபவர்கள் சின்ன வெங்காயத்தினை தாளித்த பிறகு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*இந்த கொத்சு பொங்கல்,இட்லி+அரிசி உப்புமாவுக்கு பெஸ்ட் காம்பினேஷன்.

Related Videos