காரமான மிக்ஸர் செய்வது எப்படி???
தேவையான பொருட்கள்:
ஒமப்பொடி - 1 கப்
காரா பூந்தி - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மைதா பிஸ்கட் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் பொரிக்க
அவல் - 1 கைப்பிடி
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - தேவைக்கு
வேர்க்கடலை - 1 கைப்பிடி
மைதா பிஸ்கட் செய்யும் முறை
மைதா+சர்க்கரை -தலா 1/4 கப்
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை விளக்கம்:
*அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையானளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசையவும்.
*பின் உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் செய்து கட் செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*அல்லது 180°C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கலாம்.
மிக்ஸட் லெட்டூஸ் சாலட் செய்வது எப்படி???
*எண்ணெயில் பொரிக்க கொடுத்துள்ளவைகளை தனித்தனியாக பொரித்துக் கொள்ளவும்.
*ஜிப்லாக் கவர் அல்லது ஒரு டப்பாவில் அனைத்து பொருட்களுடன் சிறிது உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் குறிப்பு:
பூந்தி செய்யும் போது மாவை 2 பங்காக பிரிது ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் சேர்த்து செய்தால் மிக்ஸர் பார்க்க அழகாக இருக்கும்.
இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.
Mixer Receipe in Tamil | Tasty & Crispy Mixer in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil