முதலூர் மஸ்கோத் அல்வா | mudalur muscoth halwa
முதலூர் என்பது தூத்துக்குடியில் இருக்கும் ஒரு கிராமம்.இங்கு இந்த மஸ்கோத் அல்வா மிக பிரபலம்.
இந்த அல்வாவின் ஸ்பெஷல் நெய்/ எண்ணெய் எதுவும் சேர்க்கபடுவதில்லை.தேங்காய்பாலில் செய்வது தான் இதன் ஸ்பெஷல்.
இந்த அல்வாவின் பெயர் காரணம் வளைகுடா நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் தேங்காய்பாலில் இந்த அல்வா செய்வதால் காலபோக்கில் இது மஸ்கோத் அல்வா என அழைக்கபடுகிறது.
இந்த அல்வா செய்ய மிக பொறுமை தேவை.1/2 கப் மைதா போட்டு செய்ததில் எனக்கு கிட்டதக்க 55 நிமிடங்கள் ஆனது.
தேவையான பொருட்கள்:
தேங்காய் -1
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரிதுண்டுகள் -10
செய்முறை விளக்கம்:
*பின் அதில் 3 கப் வரை நீர் சேர்த்து பிசையவும்.மைதாவிலிருந்து பால் வரும்.
*இதனை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி அப்படியே வைக்கவும்.
*மறுநாள் மேலோடு இருக்கும் நீரை வடிகட்டி பாலை மட்டும் பயன்படுத்தவும்.
*தேங்காயை துருவி 3 கப் வரை கெட்டிப்பால் எடுக்கவும்.
*அல்வா வெந்து கலவை பந்து போல சுருண்டு வரும் போது தட்டில் கொட்டி துண்டுகள் போட்டோ அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.