சாத்தூர் சேவ் | Sattur Sev

இதில் சேர்க்கபடும் முக்கிய பொருளே பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் தான்.இதில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பிசைய தேவையில்லை.விரும்பினால் சேர்க்கலாம்.


இந்த சேவ் சுவையாக இருக்க காரணம் அந்த ஊரின் தண்ணீரும் ஒரு காரணம்.

தேவையான பொருட்கள்: 

கடலை மாவு -  1/2 கப்
அரிசி மாவு -1/2 கப்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் -5
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை விளக்கம்:

*பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் இவற்றினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

 *பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு இவற்றினை சிறிது நீரில் கரைக்கவும்.

 *பின் கடலை மாவு, அரிசி மாவு, சீரகம் மற்றும் அரைத்த பூண்டு விழுது சேர்க்கவும்.

 *தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

 *எண்ணெய் காயவைத்து சேவ் அச்சியி அல்லது தேன் குழல் அச்சியில் போட்டு பிழியவும்.

*பிழியும் போது 1 சுற்று மட்டுமே சுற்றி பிழியவும். அதிக சுற்று சுற்றினால் சேவ் வேகாது மேலும் தனிதனியாக   பிரிக்க முடியாது.

*பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

*ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

Related Videos