வெண்டைக்காய் பொரியல் (பிண்டி ஜூங்கா ) | Bhindi Zunka

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 2 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

கடலைமாவு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

சீரகம் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 

செய்முறை விளக்கம்:

*வெறும் கடாயில் கடலைமாவை வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

*வதங்கியதும் வெண்டைக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

*வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் கடலைமாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் சேர்த்து நன்கு பிரட்டவும்.தண்ணீர் ஊற்றக்கூடாது.

*தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

Related Videos