பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ் | Paneer Potato Podimas
தேவையான பொருட்கள்:
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
உதிர்த்த பனீர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
நசுக்கிய இஞ்சி,பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், நசுக்கிய இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வெங்காயம் நன்கு வதங்கிய பின் மசித்த உருளை, மிளகுத்தூள், சோம்புத்தூள், உப்பு மற்றும் பனீர் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.