காலிபிளவர் பனீர் பொடிமாஸ் | Cauliflower Paneer Podimas

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் - 1 சிறிய பூ
துருவிய பனீர் - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை விளக்கம்:

*காலிபிளவரை பெரிய பூக்களாக நறுக்கி,உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு அலசி வைக்கவும்.

*பின் கேரட் துருவியில் காலிபிளவரை துருவி ஆவியில் 5 - 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், ப.மிளகாய், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காலிபிளவர் மற்றும் பனீர் சேர்த்து கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

Related Videos