புடலங்காய் பொரியல் | Snake Gourd Poriyal

தேவையான பொருட்கள்:

புடலங்காய் - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்தேங்காய்துருவல் - 1/4 கப்

தாளிக்க:

கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
உப்பு + எண்ணெய் = தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:

*.புடலங்காயை பொடியாக கட்செய்து உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

*அப்போழுது தான் அதில் இருக்கும் நீர்விடும்.15 நிமிடம் கழித்து நீரில் அலசி பிழிந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புடலங்காயை சேர்க்கவும்.

*1 கப் நீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

பின் குறிப்பு:

*விருப்பப்பட்டால் சிறிது வறுத்த வேர்கடலையை லேசாக பொடித்துப் போடலாம்.

Related Videos