பீன்ஸ் பொரியல் | Beans Poriyal
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு+உளுத்தப்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பீன்ஸ் மற்றும் வெங்காயம் பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் பீன்ஸ்+ உப்பு+11/2 கப் தண்ணீர்+பாசிப்பருப்பு செர்த்து வேகவிடவும்.
*காய் வெந்ததும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.