கோஸ் வெங்காயத்தாள் பொரியல் | Cabbage Spring Onion Poriyal
தேவையான பொருட்கள்:
கோஸ் - 1/4 கிலோ
வெங்காயத்தாள் - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
பாசிப்பாருப்பு - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கோஸ்+வெங்காயத்தாள் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய காய்களைப் போட்டு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் பாசிப்பருப்பு போட்டு காய் வேகுமளவு நீர்விட்டு வேக வைக்கவும்.
*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*இதே மாதிரி வெங்காயத்தாளை கேரட் பொரியலிலும் சேர்த்து செய்யலாம்.