பீர்க்கங்காய் வேர்க்கடலை பொரியல் | Ridge Gourd Peanut Poriyal
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 3 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - சிறிது
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பின் பீர்க்கங்காய், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
*தண்ணீர் ஊற்றதேவையில்லை.காய் விடும் நீர் போதுமானது.
*வெந்ததும் வேர்க்கடலை மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.