வாழைக்காய் புட்டு | Plantain Puttu

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய பூண்டுப்பல் - 4
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை விளக்கம்:

*வாழைக்காயை தோலோடு வேகவைக்கவும்.வெந்ததும் தோல் தனியாக வந்துவிடும்.

*வாழைக்காயினை துருவிக்கொள்ளவும்.அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் சோம்புத்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம், நசுக்கிய பூண்டுப்பல் மற்றும் பச்சை மிளகாயினை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் வாழைக்காயினை போட்டு நன்கு கிளறவும்.

*பொலபொலவென வரும்போது தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.

Related Videos