அவரை - சோள உசிலி | Broad Beans Corn Usili
தேவையான பொருட்கள்:
அவரைக்காய் -100 கிராம்
சோளமுத்துக்கள் - 1 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை விளக்கம்:
*அவரைக்காயை பொடியாக நறுக்கி வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.
*சோளகுத்துக்களையும் சிறிது உப்பு போட்டு வைக்கவும்.
*துவரம்பருப்பு+கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
*ஊறவைத்த பருப்புடன்+பெருங்காயப்பொடி மற்றும் வேகவைத்த சோளத்துடன் சேர்த்து அரைக்கவும்.
*கடாயில் எண்ணேய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக உதிரியாக வரும் வரை எண்ணெய் விட்டு கிளறவும்.
*பின் இதனுடன் வேக வைத்த அவரைக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மேலும் நன்கு கிளறி இறக்கவும்.
*இந்த உசிலி சுவையும்,மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.