கேரளா பருப்பு கறி | Kerala Parippu Curry

தேவையான பொருட்கள்:

பாசிபருப்பு- 1/2 கப்

மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்

நீர்- 2 கப்

உப்பு -தேவைக்கு

நெய் -1 டீஸ்பூன்

அரைக்க‌:

தேங்காய்த்துறுவல்- 1/3 கப்

பூண்டுப்பல்- 2

இஞ்சி துறுவல்- 1/2 டீஸ்பூன்

சீரகம்- 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்- 1

தாளிக்க‌:

தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 1

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -2

கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை விளக்கம்:

*வெறும் கடாயில் பாசிபருப்பினை வாசனை வரும் வரை வறுத்து மஞ்சள்தூள் மற்றும் 2 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவிடவும்

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைக்கவும்

*பருப்பு வெந்ததும் உப்பு மற்றும் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து சிறுதீயில் 5 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்

*பின் தேங்காய் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பருப்பில் சேர்க்கவும்.

*பரிமாறும் போது நெய் சேர்த்து,உருளை வருவல் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

பின் குறிப்பு:

*பருப்பு ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதற்குதகுந்தாற் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*ஒணம் சத்யாவின் செய்யும் போது இஞ்சி,பூண்டு,சின்ன வெங்காயம் சேர்க்காமல் செய்யவும்.

*பருப்பினை எப்போழுதும் வறுத்து வேகவைக்கவும்,நல்ல மணமாக இருக்கும்

Related Videos