வேப்பம்பூ பச்சடி செய்வது எப்படி......

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 2 டீஸ்பூன்

மாங்காய்த்துறுவல் - 3/4 கப்

வெல்லம் - 1/2 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்த முந்திரி - தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை-சிறிது

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மாங்காய் துறுவலை சேர்த்து நீர் விட்டு வேகவிடவும்.

*மாங்காய் நன்கு வெந்ததும் வெல்லக்கரைசலை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து முந்திரி சேர்த்து இறக்கவும்.

*வேறொரு கடாயில் நெய் விட்டு வேப்பம்பூவை கருகாமல் வறுத்தெடுத்து ஆறியதும்  பச்சடியில் சேர்க்கவும்.

இத்தாலியன் ப்ரெட் சூப் செய்வது எப்படி???

பின் குறிப்பு:

*மாங்காய்த்துறுவலுக்கு பதில் 1 கப் புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.பச்சை வாசனை போனதும்  டேபிள்ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து சேர்த்து புளிகரைசலில் ஊற்றி  கொதிக்கவைத்து கெட்டியாக  வரும்போது வெல்லகரைசல்+நெய்யில் வறுத்த வேப்பம்பூவை சேர்த்து இறக்கவும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய cinema.sebosa இணையதளத்தை அணுகுங்கள். மேலும் உங்களின் கருத்துக்களை பதிவிட என்ற ecoimbatore Facebook பக்கத்தில் இணையுங்கள் நன்றி.

Neem Flower Receipe in Tamil | Healthy & Taste Neem Flower in Tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | velinaatu seithigal in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | Government Job news in tamil

Related Videos