வடகத் துவையல்
தேவையான பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
வடகம் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரிக்கவும்.
*அதே கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காயை லேசாக வதக்கவும்.
*ஆறியதும் புளி மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
*இந்த துவையலை 2 நாள் வரை ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
பின் குறிப்பு:
இந்த துவையலை சாப்பிட்டு பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.எனக்கு மிகவும் பிடித்த துவையல் இது