பீன்ஸ் கொள்ளு உசிலி | Beans Kollu Usili
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
உசிலிக்கு:
கொள்ளு -1/2 கப்
காய்ந்த மிளகாய் -3
மிளகு - 6
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -3
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பீன்ஸ் மற்றும் வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
*கொள்ளை 5 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, சோம்பு மற்றும் பூண்டுப்பல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து வேக விடவும்.
*மற்றொரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த கொள்ளினை சேர்த்து பொலபொலவென வரும் வரை வதக்கவும்.
*பீன்ஸ் வெந்ததும் வதக்கிய கொள்ளினை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் குறிப்பு:
*விருப்பப்பட்டால் தேங்காய் துறுவல் சேர்க்கலாம்.
*உசிலி துவரம்பருப்பில் செய்து போரடித்துவிட்டால் கொள்ளு,காராமணி சேர்த்து செய்யலாம்.