கோங்கூரா(புளிச்சகீரை)துவையல் | gongura thogayal
தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை - 1 கட்டு
முழு பூண்டு - 2
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 கோலிகுண்டளவு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கீரையை சுத்தம் செய்யவும்.பூண்டை உரித்து நசுக்கிக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கி தனியாக வைக்கவும்.
*பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை தனிதனியாக வதக்கி கொள்ளவும்.பின் வடகத்தையும் பொரித்துக் கொள்ளவும்.
*மிக்ஸியில் கீரை, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்.முக்கால் பாகம் கீரை அரைப்பட்டதும் வடகத்தை போட்டு அரைக்கவும்.
*கடைசியாக வதக்கிய பூண்டைப்போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.
*கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து ஆறவைத்து அரைத்த கீரையில் ஊற்றவும்.
*1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.சாதத்துடன் சாப்பிட செம ருசியாக இருக்கும்.
*புளியை கிரையின் புளிப்பிற்கேற்ப சேர்க்கவும்