குடமிளகாய் பச்சைபயறு உசிலி | Capsicum Green Gram Usili
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பச்சைபயறு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பச்சைபயறை 3 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய், உப்பு, சோம்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காய்த்தை போட்டு வதக்கவும்.
*பின் குடமிளகாய்மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி உதிர்த்த பச்சைபயறை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
*குடமிளகாயை லேசாக வதக்கினால் போதும்.