பழக்கலவைத் தொக்கு | Mixed Fruit Thokku
தேவையான பொருட்கள்:
பழக்கலவை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை விளக்கம்:
*பழங்களை சதுரதுண்டங்களாக நறுக்கி குக்கரில் நீர் விடாமல் 1 விசில் வரை வேகவைக்கவும்.
*வெந்த பழங்களை மசிக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
*உடனே மசித்த பழக்கலவையை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி எடுக்கவும்.
*மோர்,ரசம் சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
பின் குறிப்பு:
*பழங்கள் அதிகமாக இருந்தால் இப்படி செய்யலாம்.
*நான் சேர்த்திருக்கும் பழங்கள் க்ரீன் ஆப்பிள், பைனாப்பிள் மற்றும் மஞ்சள் மற்றும் வெள்ளை மெலன் பழங்கள்