முள்ளங்கி சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சிறிய வெள்ளை முள்ளங்கி - 1
உப்பு+எண்ணெய் - தே.அளவு
நெய் - 1 டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா - 1/4 தேக்கரண்டி.
கொத்தமல்லித் தழை - சிறிது.
செய்முறை விளக்கம்:
*முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.அதை நெய்விட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*மாவு, உப்பு, தூள்வகைகள், முள்ளங்கி மற்றும் கொத்தமல்லித் தழை அனைத்தும் ஒன்றாக கலந்து தண்ணிர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
*1 மணிநேரம் நன்கு ஊறியதும் சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.
*சாம்பார்,குருமாவுடன் சூடாக பரிமாறவும்.
*சர்க்கரை நோயாளிகளுக்கு முள்ளங்கி சப்பாத்தி மிகவும் நல்லது.