சோயா - முளைக்கீரை பொரியல் | Soya Amaranth Leaves Poriyal
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை - 1 கட்டு
சோயா உருண்டைகள் - 20
வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் -தேவைக்கு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
தாளிக்க:
கடுகு - 1டீஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போடவும்.
*சிறிது நேரத்தில் உருண்டை பெருசாகும்,மீண்டும் அதை நல்ல தண்ணீரில் அலசி பிழிந்துக் கொள்ளவும்.
*அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் துருவலாகிவிடும்.
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
*கீரையை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
*வதங்கியதும் சோயாதுருவலைப் போட்டு லேசாக வதக்கி கீரையை சேர்க்கவும்.உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.
*தண்ணீர் ஊற்ற வேண்டாம்.கீரைவிடும் நீரிலேயே வெந்துவிடும்.
*வெந்ததும் தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*இதே மாதிரி சோயாவை சேர்த்து எந்தவகை கீரையிலும் சேர்க்கலாம்.