வேப்பம்பூ துவையல் | NeemFlower Thuvaiyal
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
கா.மிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயம் - சிறுதுண்டு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் – தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*உளுத்தம்பருப்பு மற்றும் தேங்கய்த்துறுவல் இவைகளை தனித்தனியாக வெறும் கடாயில் வறுக்கவும்.
*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வதக்கி எடுக்கவும்.
*ஆறியதும் முதலில் மிக்ஸியில் உளுத்தம்பருப்பை பொடி செய்து பின் மற்ற பொருட்களை உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
*கொஞ்சம்கூட கசப்பே தெரியாது இந்த துவையல்.
*வேப்பம்பூ கருகிவிட்டால் துவையல் கசக்கும்.