பாசிப்பருப்பு மோர்குழம்பு | Paruppu Urundai Kuzhambu
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1 சிறியது
பச்சை நெல்லிக்காய் - 2
வறுத்த வெந்தயப் பொடி - 1/2 டீஸ்பூன்
வறுத்த உளுந்து பொடி - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்=தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தாளிக்க:
கடுகு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை -சிறிது
மோர் மிளகாய் - 4
சுண்டைக்காய் வற்றல் - 3/4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை -சிறிது
மோர் மிளகாய் - 4
சுண்டைக்காய் வற்றல் - 3/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.நெல்லிக்காயை கொட்டை எடுத்து நறுக்கவும்.
*தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய், சீரகம், பாசிப்பருப்பு, தக்காளி மற்றும் நறுக்கிய நெல்லிக்காய் உவை அனைத்தும் விழுதாக அரைக்கவும்.
*கடைந்த தயிரில் உப்பு, மஞ்சள்தூள்,அரைத்த விழுது, வெந்தயப் பொடி மற்றும் உளுந்துப் பொடி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
*நுரை வரும் போது இறக்கி,தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்துக் கொட்டவும்.
பின் குறிப்பு:
*நெல்லிக்காய் சேர்ப்பதால் ரொம்ப நல்லாயிருக்கும்.மோர்மிளகாய்+சுண்டைக்காய் வற்றல் சேர்த்து தாளிப்பதால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.