கடலைமாவு மோர்குழம்பு | Besan Gram Mor Kuzhambu

தேவையான பொருட்கள்: 

தயிர் - 1கப்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஊப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*தேங்காயை மைய அரைத்துக் கொள்ளவும்.

*தயிரில் உப்பு, மஞ்சள்தூள், கடலைமாவு மற்றும் தேங்காய் விழுது அனைத்தையும் தேவையானளவில் நீர் கலந்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மோர்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிவந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இந்த மோர்குழம்பை ஈஸியாக செய்துவிடலாம்.

Related Videos