ஈஸி கத்திரிக்காய் பொரியல் | Easy Brinjal Poriyal
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 5 சிறியது
பூண்டுப்பல் - 10
வெங்காயம் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
வடகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கத்திரிக்காயை பொடியாகவோ அல்லது நீளவாக்கிலோ அரியவும்.
*பூண்டு மற்றும் வெங்காயம் நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வடகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டுப்பல், வெங்காயம், கத்திரிக்காய், சாம்பார் பொடி மற்றும் உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் லேசாக நீர் தெளித்து மூடி போட்டு சிறுதீயில் கத்திரிக்காய் வேகும்வரை வேகவிடவும்.
*சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் நன்றாகயிருக்கும்.