முளைக்கட்டிய வெந்தயக்குழம்பு | Sprouted Fen Greek Seeds Kuzhambu
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய வெந்தயம் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுபல் - 5
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார்பொடி (அ) வத்தக்குழம்பு பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
செய்முறை விளக்கம்:
*பூண்டை வெட்டிக்கொள்ளவும்.தேங்காயுடன் சிறிது முளைக்கட்டிய வெந்தயத்தை சேர்த்து மைய அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், பூண்டுப்பல், முளைக்கட்டிய வெந்தயம், வத்தக்குழம்பு பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
*பின் புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் குழம்பை இறக்கவும்.
*2நாளானலும் இந்த குழம்பு சுவையாக இருக்கும்.