உருண்டை மோர் குழம்பு | Urundai Mor Kuzhambu
தேவையான பொருட்கள்:
மோர் குழம்புக்கு
தயிர் - 125 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி +துவரம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தனியா - 1 டீஸ்பூன்
உருண்டைக்கு:
துவரம்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் -3
பூண்டுப்பல் -4
இஞ்சி - 1 சிறுதுண்டு
மிளகு -4
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை விளக்கம்:
*பச்சரிசி மற்றும் து.பருப்பு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.தனியாவை வெறும் கடாயில் வறுக்கவும்.
*ஊறியதும் இவற்றுடன் தேங்காய், சீரகம், ப.மிளகாய், இஞ்சி மற்றும் தனியா சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
*தயிரைக்கடைந்து உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைசாறு மற்றும் அரைத்து விழுது சேர்த்து நீர்க்க கரைக்கவும்.
*உருண்டைக்கு குடுத்துள்ள துவரம் பருப்புடன் மற்றும் மிளகாய் சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*அதனுடன் உப்பு, மிளகு, பூண்டுப்பல் மற்றும் இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
*கடாயில் சிறிது எண்ணெய்விட்டு அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாக கிளறவும்.
*அதனை உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைக்கவும்.
* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து மோர் கலவையில் வெந்த உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.
பின் குறிப்பு:
*அசத்தலான சுவையில் இருக்கும் இந்த குழம்பு.