அவரைக்காய் சாம்பார் | AVARAKKAI (BROAD BEANS) SAMBAR


ஒவ்வொரு காய் போட்டு சாம்பார் வைக்கும் தனி ருசி தான்.அதில் நாட்டு அவரைக்காயும் ஒன்று.இந்த காய் போட்டு சாம்பார் வைக்கும் போது சாம்பாரின் ருசியே தனிதான்.

நாட்டு அவரைக்காய் சமைக்கும் போது சீக்கிரம் வெந்து விடும்.

தேவையான பொருட்கள்:

நாட்டு அவரைக்காய் -10
துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி- 2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி -1
கீறிய பச்சை மிளகாய்- 2
புளிகரைசல்- 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌:

எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்+ 1 டீஸ்பூன்
வடகம்- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்கயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*துவரம்பருப்பினை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

*அவரைக்காயின் இரு பக்கங்களிலும் நாரினை நீக்கி விட்டு அப்படியே கையால் 2 அல்லது 3 ஆக ஒடிக்கலாம்.

*பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்கயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் அவரைக்காய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*அவரைக்காயை வதக்கி சேர்ப்பதால் 2- 3 நிமிடங்களிலேயே வெந்துவிடும்.

*பின் புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*கடைசியாக மீதமிருக்கும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Related Videos