லச்சா பரோட்டா | laccha paratha

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 2 கப் + 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*2 கப் கோதுமைமாவில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து தேவையானளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து எண்ணெய் தடவி 1 மணிநேரம் வைக்கவும்.

* நெய்யை சூடு செய்து 3 டேபிள்ஸ்பூன் மாவை கலந்து வைக்கவும்.

*மாவை உருண்டைகளாகி மெலிதாக தேய்த்து அதன்மேல் நெய் கலவையை பரவலாக தடவவும்.

*அதனை ஒரு முனையிலிருந்து இடது மற்றும் வலது பக்கமாக மடித்துக் கொண்டே வந்து கயிறு போல இழுத்து வட்டமாக சுற்றவும்.

*இப்படியே அனைத்து உருண்டைகளையும் செய்த பின் ,ஒரு உருண்டையை எடுத்து மெலிதாக உருட்டவும்.

*அதனை தவாவில் 2பக்கமும் எண்ணெய் விட்டு சூடு செய்து எடுக்கவும்.3அல்லது 4 பரோட்டக்களை போட்டவுடன் சூட்டோடு 2பக்கமும் கைகளால் தட்டவும்.அப்போழுதுதான் லேயராக வரும்.

பின் குறிப்பு:

*விரும்பினால் மாவு பிசையும் போது 1 முட்டை சேர்த்து பிசையலாம்.

Related Videos