பகோடா குழம்பு | Pakoda Kuzhambu

தேவையான பொருட்கள்:

புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

பகோடாவுக்கு:

கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை விளக்கம்:

*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி சோம்பு, உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக நீர் விடாமல் அரைக்கவும்.

*அதனுடன் வெங்காயம் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து பகோடாகளாக பொரித்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம், பூண்டுப்பல், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்கு கொதித்ததும் பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பின் குறிப்பு:

*கடலைமாவிலும் பகோடாவை செய்து போடலாம்.

Related Videos