3 வன்ண குடமிளகாய் சீஸ் பராத்தா | Tricolour Capsicum Cheese Paratha
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்+சுடுவதற்கு
ஸ்டப்பிங் செய்ய:
பொடியாக நறுக்கிய குடமிளகாய் -1/2 கப்
துருவிய சீஸ் -1/2 கப்
சீரகபொடி -1/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சீஸில் உப்பு இருக்கும்,அதனல் உப்பின் அளவை பார்த்து சேர்க்கவும்.
செய்முறை விளக்கம்:
*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*கோதுமை மாவில் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
*பின் சிறு உருண்டைகளாக எடுத்து லேசாக மாவினை தேய்க்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஸ்டப்பினை வைக்கவும்.
*அதனை அப்படியே மேல் நோக்கி மடிக்கவும்.மடித்த பாகத்தினை அடிப்பக்கம் வைத்து மாவினை லேசாக தேய்க்கவும்.
*சூடான தவாவில் போட்டு 2 பக்கமும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
*இதனை அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும்.விரும்பினால் தயிர் தொட்டு சாப்பிடலாம்.