அகத்தி கீரை சாம்பார் | Agathi Keerai Sambhar


*இந்த கீரையின் ஸ்பெஷல் காய்ந்த பிறகும் சமைக்கலாம். 

*கொழுந்தாக இருக்கும் அகத்தி கீரையை அப்படியே காயவைத்தால் நன்கு உலர்ந்துவிடும்,அதனை  சாம்பார் மற்றும் தண்ணீசாறு செய்யலாம்.

*ப்ரெஷ் கீரையாக இருந்தால் மட்டும் வதக்கி சேர்க்கவும்,காய்ந்த கீரையாக இருந்தால் சாம்பார் கொதிக்கும் போது கடைசியாக சேர்க்கலாம்.

*கீரை சாம்பாரில் மட்டும் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்க கூடாது,சேர்த்தால் சாம்பாரின் சுவை மாறிவிடும்.

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
புளிகரைசல் - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் -2
காய்ந்த அகத்தி கீரை - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பருப்பை மஞ்சள்தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் வேகவைத்த துவரம்பருப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*கீரையை  நன்கு அலசி நீரை வடிகட்டவும்.

*சாம்பார் பொடி வாசனை போனதும் புளிகரைசல் மற்றும்  உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பின் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும்.

*எண்ணெய் காயத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பின் குறிப்பு:

*ப்ரெஷ் கீரையாக இருந்தால் 1/2 கப்பினை வெங்காயம் தக்காளி வதக்கும் போதே வதக்கி செய்யவும்.

Related Videos